Print this page

மாளவியா. பகுத்தறிவு - கட்டுரை - 26.08.1934 

Rate this item
(0 votes)

பழங் காங்கிரஸ்வாதி என்று சொல்லப்படும் பண்டித மாளவியா அவர்கள் காங்கிரசின் ஜாதிமத வகுப்பு சம்மதமாய், சம சந்தர்ப்பம் வழங்கும் கொள்கையில் அதிருப்தி கொண்டு அதன் நிறுவாகத்தில் இருந்து விலகி தேர்தலில் காங்கிரசுடன் போட்டி போடவும், ஒவ்வொரு தொகுதியிலும் காங்கிரஸ் அபேக்ஷகருக்கு எதிர் ஆளை நிறுத்தி எதிர்ப்பிரசாரம் செய்யவும் தீர்மானித்து எதிர்கு அமைத்து விட்டார். இதற்கு காங்கிரஸ் சர்வாதிகாரியாய் இருந்து தோழர் ஆனேயும் சம்மதித்தப் பண்டிதருடன் சேர்ந்து காங்கிரசை எதிர்த்து வருகிறார். 

இதைப் பார்த்த எந்த பார்ப்பனரும், பார்ப்பனரல்லாத கூலி பக்தரும், மாளவியாவை தேசத் துரோகி யென்றும், காங்கிரஸ் துரோகி என்று கூறவும் இல்லை . இனியும் தேசபக்தர் என்றேதான் அவர்கள் அழைக்கப் படுகிறார்கள். ஆகவே தேசபக்தர் என்றால் யார் என்பதும் தேசத் துரோகி என்றால் யார் என்பதும் இதிலிருந்தே தெரிந்து கொள்ளலாம். 

பார்ப்பன அடிமைகளுக்கும், பார்ப்பனரல்லாத கூலி பிரசாரகர்களுக்கும், பத்திராதிபர்களுக்கும், எலும்புத்துண்டு போடுகின்றவர்களுக்குந்தான் தேசபக்தர்கள், காங்கிரஸ்வாதிகள், தேசாபிமானிகள் ஆகிவிடுவார்கள். 

மற்றவர்கள் தேசத் துரோகி, காங்கிரஸ் எதிரி ஆகிவிடுவார்கள் என்பதுதான் அரசியல் அகராதி அருத்தம் போலும். 

பகுத்தறிவு - கட்டுரை - 26.08.1934

Read 81 times